வித்யாதன் ஸ்காலர்ஷிப்

0
78

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, சரோஜினி தாமோதரன் நிறுவனம், உயர்நிலை பள்ளிப் படிப்பிற்கான உதவித்தொகையை வழங்குகிறது!

சரோஜினி தாமோதரன் அறக்கட்டளையானது, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும், சமுதாயத்தில் கல்வி ரீதியான வளர்ச்சியை ஏற்படுத்தவும் வித்யதன் கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது.

இந்த உதவித்தொகை திட்டத்தின் மூலம், ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் பயன் பெறுவர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 90 சதவீதத்திகும் அதிகமாக மதிப்பெண் பெற்று குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் இருக்கும், மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளி மாணவர்கள் என்றால், பத்தாம் வகுப்பில் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தாலே இந்த உதவித்தொகை திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய இரண்டு ஆண்டு உயர்நிலைப் பள்ளி படிப்பிற்கும், தலா 60,000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த மாணவர்கள் உயர்நிலை படிப்பிலும் நல்ல மதிப்பெண்ணகளுடன் தேர்ச்சி பெற்றால், அவர்களது மேற்படிப்பிற்கும் தேவையான உதவித்தொகையை அறக்கட்டளை வழங்க உள்ளது.

தகுதியுள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். மேலும், இந்த உதவித்தொகை தொடர்பான கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால், vidyadhan.tamilnadu@sdfoundationindia.com என்னும் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியில் பதில்களை பெறலாம் அல்லது 73396 59929 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 30

மேலும் விபரங்களுக்கு: www.vidyadhan.org

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here