2018 – 19ம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது வேளாண் பல்கலைக்கழகம்

0
108

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து தற்போது தேர்வான மாணவர்களின் தரவரிசை பட்டியலைக் கல்வி நிருவாகம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலையின், 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும், 26 இணைப்புக் கல்லூரிகள் மூலம், 12 இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. 2018 – 19ம் ஆண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப வினியோகம், மே, 18 முதல் ஜூன், 17 வரை நடந்தது.

3,422 இடங்களுக்கு, 48 ஆயிரத்து, 676 பேர் விண்ணப்பித்துள்ளனர். 32 ஆயிரத்து, 621 விண்ணப்பங்கள், உரியக் கட்டணம் செலுத்தி, முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டவை.

இதில், 18 ஆயிரத்து, 732 மாணவியரும், 13 ஆயிரத்து, 889 மாணவர்களும் அடங்குவர். ஜூன், 22ல் வேளாண் கட்-ஆப் மதிப்பெண்ணின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இதில் திண்டுக்கல்லை சேர்ந்த ஆர்த்தி.எஸ்.என் என்கிற மாணவி 200 கட்-ஆப் மதிப்பெண்ணுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து 199.67 மதிப்பெண்களுடன் ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீ கார்திகா பழனிச்சாமி இரண்டாவது இடத்தையும், 199.5 மதிப்பெண்களுடன் கோவையை சேர்ந்த மேகனா.எம் மூன்றாவது இடத்தையும், 199.34 மதிப்பெண்களுடன் திருவள்ளூரை சேர்ந்த நந்தினி.வி நான்காவது இடத்தையும், 199.25 மதிப்பெண்களுடன் தர்மபுரியை சேர்ந்த கௌசல்யா.ஜி ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here