இந்த் வங்கியில் வேலைவாய்ப்பு

0
179

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் துணை வங்கியான இந்த் வங்கியில் நிரப்பப்பட உள்ள செக்ரட்டேரியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Secretarial Officer –Trainee ( Back Office Staff)
காலியிடங்கள்: 05
தகுதி: ஏதாவதொரு இளங்கலை பட்டத்துடன் என்ஐஎஸ்எம், என்சிஎப்எம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9000 – 15,000 வழங்கப்படும்.
பணியிடம்: சென்னை:

பணி: Dealer (Stock Broking) 
காலியிடங்கள்: 10
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.2. முதல் 3 லட்சம் வழங்கப்படும்.
பணியிடம்: இந்தியா முழுவதும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் என்ஐஎஸ்எம், என்சிஎப்எம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.indbankonline.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant Vice President, HRD,
# 480, 1st Floor, Khivraj Complex 1,
Anna Salai, Nandanam,
Chennai 600035
Ph.no 044-24313094-97

பூர்த்தி செய்த விண்ணப்பித்தின் ஸ்கேன் செய்து பிரதியை recruitment@indbankonline.com  இமெயிலுக்கும் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 30.07.2018.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://corporate.indbankonline.com/Recruitment%20of%20Secretarial%20Officer%20-%20Trainee%20Back%20Office%20Staff%20&%20Dealer%20Stock%20Broking.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here